ருவரின் ஜாதக வலிமையை நிர்ணயம் செய்வதில் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. ஒரு ஜாதகம் வலிமையானதாக இருந்தால், அந்த ஜாதகத்தின் 1, 5, 9-ஆம் அதிபதிகள் வலிமை பெற்றிருக்க வேண்டும்.

Advertisment

ஜாதகத்தின் 1, 5, 9-ஆம் பாவக அதிபதிகள் மறைவு ஸ்தானங்களோடோ அல்லது அதன் அதிபதிகளோடோ சம்பந்தம் பெறாமல், திரிகோண- கேந்திராதிபதிகள் சம்பந்தம் பெறுவது சுபப் பலன். ஒரு ஜாதகத்தை இயக்கும் பலவிதமான யோகங்கள் ஜோதிடத்தில் கூறப் பட்டுள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று கர்த்தரி யோகம். இதை சுப கர்த்தரி யோகம், அசுப கர்த்தரி யோகம் என இரண்டாகப் பிரிக்கலாம்.

ஒரு ஜாதகத்தை இயக்கும் லக்னம், லக்னாதிபதிக்கு இரண்டு பக்கமும் முன்னும் பின்னும் உள்ள வீடுகளில்- அதாவது பன்னிரண்டாம் வீடு, இரண்டாவது வீட்டில் சுப கிரகங்கள் இருந்தால், சுப கர்த்தரி யோகம் உடைய ஜாதகம்.

லக்னம், லக்னாதிபதிக்கு இரண்டுபக்கமும், முன்னும் பின்னும் உள்ள வீடுகளில்- அதாவது பன்னிரண்டாம் வீடு, இரண்டாவது வீட்டில் பாவ கிரகங்கள் நின்றால், அதிர்ஷ்டக்குறைவான, போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். இதை பாவ கர்த்தரி யோகம் என்று கூறலாம்.

Advertisment

இதை இன்னும் புரியும்படி சொன்னால், இரண்டு ஆன்மிகவாதிகளின் வீடுகளுக்கு நடுவில் ஒரு வீடு இருந்தால், அந்த வீடு ஆன்மிகவாதிகளால் சுப வலிமை பெறும். அதேபோல் இரண்டு தீவிரவாதிகளுக்கு நடுவில் ஒரு வீடு இருந்தால், நீங்கள் நல்லவராக இருந்தாலும் உங்களுக்கு சுபப் பலன் குறைவாகவே இருக்கும். ஒரு கிரகம் இரு நண்பர்கள் மத்தியில் இருந்தால், நன்மையான பலனையும், இரு பகை கிரகங்களின் மத்தியில் இருந்தால் தீமையான பலனையும் தரும்.

siva-parvathi

இந்த விதி மிக முக்கியமான விதியாகும். இது லக்னம், லக்னாதிபதிக்கு மட்டுமல்ல; மற்ற எல்லா பாவங்களுக்குமே பொருந்தும். ஜாதகத்தின் வலிமையைத் தீர்மானிக்கும்போது இந்த விதியை நினைவில் வைக்க வேண்டும்.

சுப, அசுப கிரகங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். அவை: 1. இயற்கையான சுப, அசுப கிரகங்கள்.

2. லக்ன அடிப்படையிலான சுப, அசுப கிரகங்கள்.

இயற்கையான சுப, அசுப கிரகங்கள்

இயற்கையான சுபகிரகங்கள்:

குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன்.

இயற்கையான அசுபகிரகங்கள்:

சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன்.

லக்ன அடிப்படையிலான சுப, அசுப கிரகங்கள்

ஒவ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கேற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடுகிறது. உதாரணத்திற்கு இயற்கையில் சுபரான குரு, மகர லக்னத் திற்கு பாவியாகிறார். இயற்கையில் அசுப கிரகமான செவ்வாய், கடக லக்னத்திற்கு யோகம் செய்பவராக மாறி, சுபத் தன்மை பெறுகிறார். லக்ன அடிப்படையில் சில கிரகங்கள் மாரகர்களாக மாறுகின்றனர். மாரகர்கள் லக்ன ரீதியாக தீமை செய்பவர்கள். அவர்களே ஜாதக அடிப்படையில், ஜாதகரின் மரணத்தை சனிபகவானுடன் இணைந்து தீர்மானிப்பவர்கள். சில மாரகர்கள் ஜாதகத் தில் அவர்கள் இருக்கும் இடத்தைப் பொருத்து மரணத் தைத் தராமல், மரணத்திற்கு இணையான கண்டத்தைக் கொடுப்பவர்கள்.

கிரகங்கள் தமது ஆட்சி வீட்டிலோ, நட்பு வீட்டிலோ, உச்ச வீட்டிலோ நின்று, பலம்பெற்றிருந்தாலும், அந்த கிரகம் நின்ற வீட்டுக்கு 2-ஆவது வீடு மற்றும் 12-ஆவது வீட்டில் அல்லது தான் நின்ற வீட்டிலோ முன், பின் பகை கிரகங்கள் நின்றுவிட்டால், அந்த கிரகம் தனது பலத்தை இழந்துவிடும். அந்த காரக கிரகம் சுயபலத்துடன் இருந்தாலும், பகை கிரகங்களின் மத்தியில் இருப்பதால், நடுநிலைமையுடன் பலன் தரும். அதற்கு மாறாக, காரக கிரகம் சுயபலம் இல்லாமல் பகை, நீசம் பெற்றிருந்து, இரு பகை கிரகங்களுக்கு மத்தியில் இருந்தால் கெடுதலான பலனையே தரும்.

ஒரு காரக கிரகம் இருந்த வீட்டுக்கு இரண்டாம் வீட்டில் ஒரு பகைகிரகம் இருந்து, அது வக்ரமடைந்து காரக கிரகத்தை நோக்கி நகர்ந்தால், பாதகமான பலனைத் தரும். ஒரு காரக கிரகம் இருந்த வீட்டிற்கு 12-ஆம் வீட்டில் ஒரு பகை கிரகம் இருந்து, காரக கிரகம் வக்ரமடைந்திருந்தால் பாதகமான பலனையே தரும். ஒரு காரக கிரகம் இருந்த வீட்டிற்கு 2-ஆம் வீட்டில் ஒரு நட்பு கிரகம் இருந்து, அது வக்ரமடைந்திருந்தால், அந்த காரக கிரகம் சுபப் பலனையே தரும்.

ஒரு காரக கிரகம் இருந்த வீட்டிற்கு 12-ஆம் வீட்டில் ஒரு நட்பு கிரகம் இருந்து, காரக கிரகம் வக்ரமடைந்திருந்தால், அந்த காரகக் கிரகம் சுபப் பலனையே தரும். ஒரு காரக கிரகம் இருக்கும் வீட்டிற்கு 7-ஆம் வீட்டில் உள்ள கிரகமே, அந்த காரக கிரகத்தை அதிகம் பாதிக்கும்.

கர்த்தரி யோகம் ஏற்படுத்தும் பலன் களில் மூன்றுவிதமான கருத்து நிலவுகிறது.

1. லக்ன அடிப்படை யிலான கர்த்தரி யோகம்.

2. இயற்கை சுப கிரகங்கள், இயற்கை பாவ கிரகங்களால் ஏற்படும் பாவ கர்த்தரி யோகம்.

3. இரு நட்பு, பகை கிரகங்களால் ஏற்படும் பாவகர்த்தரி யோகம்.

லக்ன அடிப்படையிலான கர்த்தரி யோகம்

உதாரண ஜாதகம் 1-ல் லக்னாதிபதி சூரியனின் இயக்கம், 12-ஆம் அதிபதி சந்திரன் மற்றும் 6, 7-ஆம் அதிபதி சனியால் குறைக்கப் படும். இந்த அமைப்பை சாதாரணமாகப் பார்க்கும்போது, லக்னாதிபதி சூரியன் லக்னத் தில் ஆட்சி என்று பலன் எடுக்கப்படும். ஆனால் உண்மையான பலன் 12-ல் உள்ள ஆட்சி பலம்பெற்ற சந்திரனால் கட்டுப்படுத்த முடியாத விரயம் மற்றும் பயணம் இருந்துகொண்டே இருக்கும். 2-ல் உள்ள சனி இவருக்கு 6, 7-ஆம் அதிபதி என்பதால், வாழ்நாள் முழுவதும் கடன், நோய், மனைவி தொல்லை இருந்துகொண்டே இருக்கும். சூரியனின் இயக்கம் சந்திரன், சனியால் பாதிக்கப்பட்டு முன்னேற்றக் குறைவு ஏற்படும்.

உதாரண ஜாதகம் 2-ல் லக்னாதிபதி சூரியன் கேந்திரம் ஏறி நட்புபலம் பெற்றால் கூட 6, 7-ஆம் அதிபதி சனி உச்சம் பெற்றதால் ஆரோக்கியக் குறைவு, கடன் தொல்லை இருக்கும். சனி சூரியனை நோக்கிச் செல்கிறது. 5-ல் உள்ள குரு வக்ரம் பெற்று சூரியனை நோக்கிச் செல்லும். 5, 8-ஆம் அதிபதியாக இருப்பதால் குழந்தை பாக்கியம் காலதாமதமாகக் கிடைக்கும். அத்து டன், குழந்தைக்கும் தந்தைக்கும் வாழ்நாள் முழுவதும் கருத்து வேறுபாடு நிலவும்.

உதாரண ஜாதகம் 3-ல் லக்னாதிபதி சூரியன் கேந்திரம் பெறுகிறார். லக்ன சுபர்களான செவ்வாய் 9-ல், குரு 11-ல் இருப்பதால் அரசு பதவி, அரசியல் யோகம் என சுபப் பலன்கள் மிகுந்துகொண்டே இருக்கும். இது சுப கர்த்தரி யோகம்.

இயற்கை சுப கிரகங்களுக்கு, இயற்கை பாவ கிரகங்களால் ஏற்படும் பாவ கர்த்தரி யோகம்

உதாரண ஜாதகம் 4-ல் லக்னாதிபதி புதனுக்கு இயற்கை சுப கிரகமான குரு 12-ல், சுப கிரகமான புதன் 2-ல் இருப்பதால் சுய முன்னேற்றம், மனைவி, குழந்தைகளால் இன்பம், வீடு, வாகன யோகம் என சிறப்பான பலன்கள் நடந்து கொண்டே இருக்கும். இது சுப கர்த்தரி யோகம்.

உதாரண ஜாதகம் 5-ல் லக்னாதிபதி, குரு 10-ல் கேந்திரம் ஏறி கேந்திராதிபத்திய தோஷம் ஏற்பட்டிருக்கிறது. 2-ல் செவ்வாய், 12-ல் ராகு. இது பாவ கர்த்தரி தோஷம் என பலன் கூறுவார்கள். ஆனால் குருவுக்கு 12-ல் உள்ள ராகு, குருவுக்கு 11-ஆம் இடமான லாப ஸ்தானத்தை நோக்கிச் செல்கிறது. குரு செவ்வாயை நோக்கிச் செல்வதால் சுபப் பலன் இரட்டிப்பாகும். இது சுப கர்த்தரி யோகம்.

உதாரண ஜாதகம் 6-ல் லக்னாதி பதி சுக்கிரனுக்கு 12-ல் உள்ள சூரியன், 2-ல் உள்ள கேதுவால் திருமணத்தடை, திருமண வாழ்வில் நிம்மதியின்மை , கருத்து வேறுபாடு, உயிரணுக் குறைபாடு, கருக்குழாய் அடைப்பு போன்ற பிரச்சினைகளைத் தரும் பாவ கர்த்தரி யோகம்.

இரு நட்பு, பகை கிரகங்களால் ஏற்படும் பாவ கர்த்தரி யோகம்

உதாரண ஜாதகம் 7-ல் சுக்கிரனுக்கு 2 ல் சனி இருப்பது நட்பு கிரகமான புதனின் வீடு. 12-ல் உள்ள குரு சுக்கிரனுக்கு பகை கிரகம். ஆனால் குருவுக்கு சுக்கிரன் பகை கிரகமல்ல. குரு நிற்பது நட்பு வீடான செவ்வாயின் வீடு என்பதால், இது சுப கர்த்தரி யோகம்.

உதாரண ஜாதகம் 8-ல் சுக்கிரன் ஆட்சி பலம் பெற்றுள்ளது. 2-ல் உள்ள செவ்வாய் தனக்கு பகை வீட்டில் இருக்கிறது. 12-ல் உள்ள சனி தன் பகை வீட்டில் உள்ளது. சனி தன் 3-ஆம் பார்வையால் செவ்வாயைப் பார்க்கும் என்பதால், அசுபப் பலனே மிகும். இதனை நாடிமுறையில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

லக்னாதிபதியின் இயக்கம் 2, 12-ல் உள்ள லக்ன சுபரால் இயக்கப்பட்டால் சுபப் பலனும், லக்ன அசுபரால் இயக்கப்பட்டால் அசுபப் பலனும் மிகும். லக்ன இயக்கம் சரியாக இருந் தால் எல்லா செயல்களும் தங்கு தடையின்றி நடைபெறும். லக்ன இயக்கம் எல்லா செயல்களும் தடை, தாமதத்துடனே இருக்கும். லக்ன இயக் கம் தடைப்படுபவர்கள் தடையை நிவர்த்தி செய்ய ஜென்ம நட்சத்திர நாளில் பிரம்மாவை வழிபட்டுவந்தால் நல்ல பலன் கிட்டும்.

செல்: 98652 20406